பாகிஸ்தான் கொலைக்கு நாமல் ராஜபக்ச அவர்கள் வீடுதேடி சென்று ஆறுதல் கூறினார்

#Namal Rajapaksha
Prasu
4 years ago
பாகிஸ்தான் கொலைக்கு நாமல் ராஜபக்ச அவர்கள் வீடுதேடி சென்று ஆறுதல் கூறினார்

பாகிஸ்தான் படுகொலையை உலகில் அனைவரும் கண்டித்துக்கொண்டிருக்கும் வேழையில், இலங்கையில் அரசியல்வாதிகளும் பலர் இதை கண்டித்து அறிக்கையோடு நின்றுவிடாமல் அவரது குடும்பத்துக்கு தொடர் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.

அ ந்த வகையில், பிரியந்த குமாரவின் இல்லத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று மாலை சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

கணேமுல்லயில் வசிக்கும் பிரியந்தவின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்கள், பாகிஸ்தான் தூதுவர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சடலத்தை நாட்டுக்கு கொண்டு செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கொலை தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு இது ஒரு இஸ்லாமிய நாட்டில் நடைபெற்றதால், பல இலங்கை இஸ்லாமியர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4