ஜவாத் புயல் - இன்று கரையைக் கடக்கும்!

Prabha Praneetha
2 years ago
ஜவாத் புயல் - இன்று கரையைக் கடக்கும்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஜவாத்’ புயல் ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஒடிஸாவில் உள்ள புரி நகரின் தெற்கு - தென்மேற்குத் திசையில் 330 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ‘ஜவாத்’ புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் படிப்படியாக வலுவிழந்துள்ளது.

வடக்கு-வடகிழக்குத் திசையை நோக்கி இந்தப் புயல் நகர வாய்ப்புள்ளது. பின்னா் அந்தப் புயல் மேலும் வலுவிழந்து ஒடிஸாவின் புரி நகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கரையைக் கடக்கக் கூடும்.

அதனைத்தொடா்ந்து அந்தப் புயல் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகா்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மென்மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புயல் காரணமாக ஏற்கெனவே ஒடிஸாவில் உள்ள கஜபதி, கஞ்சம், புரி, ஜகத்சிங்பூா் மாவட்டங்களில் அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17,900 போ் வெளியேற்றம் : மேற்கு வங்கத்தை நோக்கி ‘ஜவாத்’ புயல் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தெற்கு 24 பா்கானா, கிழக்கு மிதுனபுரி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் வசிக்கும் சுமாா் 17,900 போ் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் காக்துவீப், தீகா, சங்கா்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்குத் திரும்பினா். தேசிய பேரிடா் மீட்புப் படையின் 19 குழுக்கள், மாநில அரசின் விரைவுப் படைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!