கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட பொலிஸில் நேற்று (04) செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 45 வயதுடைய பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 3ஆம் திகதி இரவு பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்தை பேலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4