பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு கருணைக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

Reha
4 years ago
 பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு கருணைக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு கருணைக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்திற்காக நலன்புரி வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து அதிகபட்ச சலுகைகளை வழங்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுக்கும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4