பாடசாலை பஸ்ஸை எரித்தவர் ஒன்றரை வருடங்களின்பின் சிக்கியது எப்படி?

#Court Order
Prathees
4 years ago
பாடசாலை பஸ்ஸை எரித்தவர் ஒன்றரை வருடங்களின்பின் சிக்கியது எப்படி?

தனியார் பாடசாலை ஒன்றுக்குரிய பஸ் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல- மாலிபொட பொத்தெனிகந்த பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

43 வயதான சந்தேகநபர், மாலிபொட- மஹயாய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு, ஜூலை மாதம் 20ஆம் திகதி இரவு, குறித்த பஸ்ஸின் உரிமையாளரின் வீட்டுக்கு அருகில் பஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது, தீபரவல் ஏற்பட்டு, பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாகியது.

இந்த நிலையில், தெரணியகல பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, நேற்று முன்தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (4)  அவிசாவளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபரை இந்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4