இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

Prabha Praneetha
4 years ago
இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புலம்பெயர்ந்தவர்கள் தம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேலும் தெரிவிக்த்த அவர், சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த போதிலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 2023ஆம் ஆண்டு இடம்பெறும் என தெரிவித்த சம்பிக்க, அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4