முன்னாள் அரசியல் கைதியிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை!

#Crime
Mayoorikka
4 years ago
முன்னாள் அரசியல் கைதியிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை!

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் நேற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் அவர் அன்று தன்னால் வரமுடியாதுள்ளது எனத் தெரிவித்து நேற்று வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.

அதனடிப்படையில் இல 149, பூட்டானி கெப்பிட்டல் கட்டிடம், கிருலப்பனை வீதி, பொல்லேன்கொட, நாரம்
பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 3 ஆம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது சுமார் மூன்றரை மணிநேரம் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4