யாழில் விபத்து: வாய் பேசமுடியாதவர் உயிரிழப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

Mayoorikka
4 years ago
யாழில் விபத்து: வாய் பேசமுடியாதவர் உயிரிழப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ். உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாய் பேச முடியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 44 வயதுடைய வாய் பேச முடியாத நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் நிலவிய அமைதியின்மையை அடுத்துப் பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மானிப்பாய்- கைதடி வீதியில் உரும்பிராய் மேற்குப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ஹைஏஸ் வான்- துவிச்சக்கர வண்டி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த உரும்பிராய் மேற்கு அன்னங்கை பகுதியைச் சேர்ந்த பிறப்பிலிருந்து வாய்பேச முடியாதவரான குணசிங்கம் சுதன்(வயது- 44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அவ்விடத்தில் கூடியோர் சுன்னாகம் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸார் ஹைஏஸ் வான் சாரதியைக் காப்பாற்ற முயல்வதாக அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பினை வெளியிட்டதுடன்
ஹைஏஸ் வான் சாரதியைப் பிடித்து நையப்புடைத்தனர். இதனால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்துப் சுன்னாகம் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்துப் பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் அவ்விடத்தில் குவிக்கப்பட்டனர்.

விபத்துக்கு காரணமான வான் சாரதியைக் கோப்பாய்ப் பொலிஸார் கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4