பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினரின் முக்கிய கோரிக்கை

Prabha Praneetha
4 years ago
பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினரின்  முக்கிய  கோரிக்கை

நாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில், கடந்த 3ஆம் திகதி மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதனையடுத்து 4 நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரம் மின் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4