குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்து! உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Accident
Mayoorikka
4 years ago
குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்து! உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   8 ஆக உயர்வடைந்துள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் அண்மையில்  இடம்பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பால விபத்தில் பல மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்திருந்தனர்

குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும் கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், குறித்த மிதப்பு பாலத்தின் ஒரு கம்பி அறுந்தமையால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4