ஏராளமான 1000 ருபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது 

#Arrest #Police
Prathees
4 years ago
ஏராளமான 1000 ருபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது 

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கண்டி- ரங்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரங்கல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உடவெல சந்திக்கு அருகில், இரண்டு போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது மற்றுமொரு சந்தேகநபர் ரங்கல பிரதேசத்தில் 50 போலி 1000 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 46 வயதுடைய உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இன்று (05) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4