வரவு செலவுத் திட்ட விவாதம்! எதிரணியினர் எடுத்த அதிரடி முடிவு

#Parliament
Mayoorikka
4 years ago
வரவு செலவுத் திட்ட விவாதம்! எதிரணியினர் எடுத்த அதிரடி முடிவு

வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்படும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுகளை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4