கிளிநொச்சியில் மர்மப் பொருளை பரிசோதித்த நபர் உடல் சிதறி பலி : 13 வயது சிறுவன் படுகாயம்

#Kilinochchi
Prathees
4 years ago
கிளிநொச்சியில் மர்மப் பொருளை பரிசோதித்த நபர் உடல் சிதறி பலி : 13 வயது சிறுவன் படுகாயம்

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்தசம்பவத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது சிவலிங்கம் யுவராஜ் (வயது- 25) உயிரிழந்துள்ளதுடன்இ சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4