முடிவின்றி நிறைவுற்ற ஆளுநருடனான சந்திப்பு!

Reha
4 years ago
முடிவின்றி நிறைவுற்ற ஆளுநருடனான சந்திப்பு!

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவற்கு சாரதிகள் மறுத்துவரும் நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது. எனினும் இந்தக் கூட்டமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே தாமும் அதனைப் பயன்படுத்துவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடற்று காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

அதனை அடுத்து ஆளுநர் "மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர், குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது" எனவும் நல்லதொரு முடிவாக எடுக்குமாறும் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் மாநகர முதல்வரும் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால், இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு வந்ததாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4