இராஜினாமா கடிதத்தை நிராகரித்தார் ஜனாதிபதி: BOI தலைவர்

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
இராஜினாமா கடிதத்தை நிராகரித்தார் ஜனாதிபதி: BOI தலைவர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை நிராகரித்துள்ளதாக முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால தெரிவித்துள்ளார்.

இதனைத் தெரிவித்து ஜனாதிபதியின் செயலாளர் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலர் அவர்களது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

உரிய பொறுப்புகளுக்கு உரியவர்கள் நியமிக்கப்படாமை இதற்கான காரணம் என குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4