உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகின்றது?

Prabha Praneetha
4 years ago
உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகின்றது?

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மார் மாத்திரமல்ல, எந்த நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தாலும் இந்த நிலைதான் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற டொலர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை அன்றி சீனாவை நாடுவதால் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4