ஒமிக்ரோன் தொடர்பாக இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

#Omicron #Shavendra Silva
Prathees
4 years ago
ஒமிக்ரோன் தொடர்பாக இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதியளித்தார்.

கண்டியில் நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

புதிய மாறுபாடு தொடர்பில் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்கால பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது. தற்போதைய சுதந்திரமான இயக்கத்தைத் தொடர. மக்கள்
பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4