9 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றனர்

Prabha Praneetha
4 years ago
9 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றனர்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 9 இலட்சத்து 56 ஆயிரத்து 946 பேர் கொரோனா  தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டில் நேற்றைய நாளில், 19 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் 17 ஆயிரத்து 644 பேருக்கு பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 868 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 220 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.

அதேநேரம் 201 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 3 ஆயிரத்து 677 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4