கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து! இருவர் படுகாயம்!!

#SriLanka #Kilinochchi #Accident
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து!  இருவர் படுகாயம்!!

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தவர்கள் இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த விபத்து சம்பவம் முற்பகல் 11 மணியளவில் பரந்தன் ஊடாக பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி வீதியிலிருந்து A9 வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், A9 வீதியில் பயணித்த ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.

டிப்பரின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் கைபிடியில் சிக்கி இழுத்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தேனுயன்,  பிலங்கர் என்றி 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வரு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4