தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

#Corona Virus
Mayoorikka
4 years ago
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

15 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,484 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 03 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 கொரோனா தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4