பாரியளவில் கஞ்சா விற்பனை செய்த முன்னாள் பிரதேச சபை  உறுப்பினர் கைது!

#Arrest
Prathees
2 years ago
பாரியளவில் கஞ்சா விற்பனை செய்த முன்னாள் பிரதேச சபை  உறுப்பினர் கைது!

ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்ற வர்த்தகர் ஒருவர்  அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரிய அளவில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த  நொச்சியாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பணி இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியரும் ஆவார்.

அனுராதபுரம் நொச்சியாகம மற்றும் உலுக்குளம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் அனுராதபுரம் புனித நகரின் வெஸ்ஸகிரிய வயல்வெளிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய காரை சோதனையிட்ட போதுஇ ​​கறுப்புப் பையில் சுற்றப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாஇ இரண்டு ஸ்மார்ட் போன்கள் உட்பட 4 போன்கள் மற்றும் ரூ.2இ79இ000 பணம் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றினர்.

பொலிஸாரும் கலால் திணைக்களமும் தனது மோசடிக்கு உதவுவதாக பெருமையடித்துக் கொண்டு சந்தேகநபர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த போது அரசாங்க வேலை பெற்று தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!