பிணைமுறி வழக்கு: 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து அர்ஜூன் மகேந்திரன் உட்பட 10 பேர் விடுதலை

#Colombo #Court Order
Prathees
2 years ago
பிணைமுறி வழக்கு:  11 குற்றச்சாட்டுக்களிலிருந்து அர்ஜூன் மகேந்திரன் உட்பட 10 பேர் விடுதலை

2016 ஆம் ஆண்டு பிணை முறி வழக்கில் 11 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட பத்து சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான வியாபாரி கசுன் பலிசேன ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 15 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுதியமை தொடர்பான 22 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்றையதினம் அறிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!