குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்!

Prabha Praneetha
2 years ago
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்!

கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவின தலைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் 4 இராஜாங்க அமைச்சுக்கள் செயற்படுகின்றன.

நாம் இதுவரை 21 நகர அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்துள்ளோம். மேலும் 52 நகர திட்டங்கள் நிறைவடையும் தருணத்தில் உள்ளன.

அத்துடன் 2024 ஆம் ஆண்டளவில் மேலும் 136 நகர அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.

பின்தங்கிய நகரங்களின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ´நூறு நகரங்கள்´ திட்டத்தின் கீழ் 117 நகரங்கள் அழகுபடுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 நகரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!