கொரோனாவை விட அடுத்த பெருந்தொற்று கொடியதாக இருக்கலாம்!

#Covid Variant
Prathees
2 years ago
கொரோனாவை விட அடுத்த பெருந்தொற்று கொடியதாக இருக்கலாம்!

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் நெருக்கடியைவிட வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.

44-வது ரிச்சர்ட் டிம்பிள்பி உரையில் பேசிய அவர், பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும் என தெரிவித்தார்.

கல்வி, கலை, தொழில் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பேச்சாளர்கள் வழங்கும் இந்த உரை, மறைந்த ஊடகவியலாளர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரிச்சர்ட் டிம்பிள்பி பெயரில் வழங்கப்படுகிறது.

இதில் பேசிய டேம் சாரா, ஒமிக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும் என எச்சரித்துள்ளார்.

ஒமிக்ரான் குறித்து அதிக தகவல்கள் வெளியாகும் வரை, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.

நாம் அனைத்தையும் கடந்துவிட்ட நிலையை அனுமதிக்க முடியாது. மேலும், நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது" என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!