ஹெல்மெட் அணிந்து சமையல் செய்தபோது  வெடித்துச் சிதறிய அடுப்பு

#Litro Gas
Prathees
4 years ago
ஹெல்மெட் அணிந்து சமையல் செய்தபோது  வெடித்துச் சிதறிய அடுப்பு

பன்னல, ஹெத்திரிப்புவ, லெஹிரியாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் சமையல் அறையில் திங்கட்கிழமை (05) மாலை சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

 சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்தது. ஆனால்  பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருந்ததால் எந்த காயமும் ஏற்படவில்லை என  பாதிக்கப்பட்ட குமாரி என்ற பெண் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ எடையுள்ள  லிட்ரோ கேஸ் சிலிண்டர் குறித்த அடுப்புடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், ரெகுலேட்டர் புதியது என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் ஆரியரத்ன மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4