குடாநாட்டின் தண்ணீர் பிரச்சனை: திட்டம் வகுத்தது நெதர்லாந்து

#Jaffna
Mayoorikka
2 years ago
குடாநாட்டின் தண்ணீர் பிரச்சனை: திட்டம் வகுத்தது நெதர்லாந்து

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர், பாசனத்துக்கான தண்ணீர் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக 'யாழ்ப்பாணத்துக்கான ஆறு' திட்டத்தை நெதர்லாந்து அரசாங்கம் தயாரித்து வருவதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஜா கோங்கிரிஜ்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்த தகவலை அவர் வெளியிட்ட நிலையில், அண்மையில் பண்டார நாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுற்றாடல் அதிகார சபையின் 40ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய உரையும் முக்கியத்துவம் பெறுகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் 70 வீதமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டுப்பாடுகளை இலக்காகக் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற நெதர்லாந்து தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர்
இதன்போது கூறி னார்.

மேலும், பல ஆண்டுகளாக நெதர்லாந்து இலங்கையுடன் அறிவு மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்தை வழங்கியுள்ளது. மேலும், விவசாய ஆராய்ச்சி புதிய நீர்ப்பாசன முறைமை அல்லது வறட்சியை தாங்கும் பயிர் வகைகளை உருவாக்குதல் போன்றவற்றை பகிர்ந்து வருகிறது.

இதன்மூலம், உற்பத்தி மற்றும் இலாபத்தை அதிகரிக்க முடியும். இது விவசாயிகளுக்கு மாத்திரமின்றி
நுகர்வோருக்கும் - இலங்கையின் உணவு பாதுகாப்புக்கும் நன்மை பயக்கும். குறைந்த நீர், ஆற்றல், மூலப் பொருட்கள் கரிம சாத்தியக்கூறுகளை பயன்படுத்துவதன் மூலம் நிலையான உணவு உற்பத்தி, நுணுக்கமான உற்பத்தி முறைமைக்காக இலங்கையின் நிறுவனங்களுடன் நெதர்லாந்து இணைந்து செயலாற்றுகிறது. 

நாம் இலங்கையின்பண்ணையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம். வரவிருக்கும் ஆண்டுகளில் விவசாய ஒத்துழைப்புக்கள் ஆழமடைவதை எதிர்பார்க்கிறோம். அதிகரித்து வரும் சனத்தொகைக்கு உணவளிக்கும் அதே நேரம் 'ஸ்மார்ட்' நுட்ப விவசாயத்துக்காக இலங்கையுடன் இணைந்து செயல்படவும் தயாராகவுள்ளோம். இதற்காக விவசாயிகள் தண்ணீரில் கவனம் செலுத்துகின்றனர்.

கடலோர துறைமுகம் மற்றும் ஆறுசார் பொறியியல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் காலநிலைக்கு ஏற்ற கட்டுமான திட்டங்களை மேம்படுத்த நெதர்லாந்து நீர் பொறியியில் வல்லுநர் இலங்கையின் வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

யாழ்ப்பாணம், அநுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மொனராகலை மாவட்டங்களில் நிலத்தடி நீர் கண்
காணிப்பு வலையமைப்பை அமைப்பதில் இலங்கை நிபுணர்களுடன் தற்போது நெதர்லாந்து பணியாற்றுகிறது என்றும் குறிப்பிட்டார். 
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!