பிரியந்த பிரியந்தவின் இறுதிக் கிரியைகள் நாளை

#Death #Pakistan
Mayoorikka
4 years ago
பிரியந்த பிரியந்தவின்  இறுதிக் கிரியைகள் நாளை

பாகிஸ்தானின்  படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை  நடைபெறவுள்ளது.

அவரது பூதவுடல் இன்று கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது பூதவுடல் நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சந்தேக நபர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4