தமிழும் அதன் தொன்மைகளும், சிறப்புக்களும் பாகம் - 01 - பிடித்தால் பகிருங்கள்.

Shelva
2 years ago
தமிழும் அதன் தொன்மைகளும், சிறப்புக்களும் பாகம் - 01 - பிடித்தால் பகிருங்கள்.

கல்தோண்றி மண் தோண்றாக் காலத்தில் இருந்து தோண்றிய மொழி தமிழ் என்று தமிழில் வரலாற்றின் தொன்மையை பலர் கூறுகிறனர்.
இருந்தும் தமிழ்மொழி பழைமையானமொழியென பல சாண்றுகள் கூறுகிறது. அச்சாண்றுகளை தமிழர்கள் அல்லாத ஆங்கிலேயர்கள்கூட தமது ஆய்வுகளில் கூறியிருப்பதால் தமிழை தொன்மையான மொழி என பலராலும் ஏற்க்கபாட்டுள்ளது.
அந்த வகையில் இடையில் சில காலகட்டங்களில் வேற்று நாட்டவர்கள் பல தமிழர் பூவீக நாடுகளை ஆண்டு தமது மொழியை தமிழுடன் கலப்புச் செய்ததனால் தமிழுக்குள் சில நாட்டு மொழியும் இண ந்ததும் அறி ந்ததே. அவ்வகையில், போத்துக்கேயர், ஒல்லாந்ததர், அராபியர்களை குறிப்பிடலாம். 
அந்த வகையில் 
தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியபோது தமிழ் பிறமொழிக் கலப்பில்லாமல் விளங்கியது. 
தமிழ் மன்னர்கள் ஆண்டபோது தோன்றிய சங்க இலக்கியத்தில் பிறமொழிக் கலப்பினைக் காண்பது அரிது. 
காலப்போக்கில் பிற மன்னர்களின் ஆட்சி நிலவியபோது தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தன. பிறமொழிக் கலப்புக்கு ஆட்சிநிலையும் வணிகமும் தலையாய காரணங்கள்.
மொகலாயர் உள்ளிட்ட தில்லி அரசர்களின் ஆட்சியின்போது உருதுச் சொற்கள் தமிழில் கலந்தன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சொற்கள் உருது மொழியிலிருந்து வந்தவை.

ஏதேனும் தவற்றைச் செய்துவிட்டால் அதற்கு மன்னிப்பு கோருவோம். ‘மன்னிப்பு’ என்ற சொல் உருதுச் சொல் என்றால் நம்புவீர்களா ? அதுதான் உண்மை. மன்னிப்பு என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் ‘பொறுத்தருளல்’ என்பதாகும். ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று கேளாமல் ‘பொறுத்தருள வேண்டுகிறேன்’ என்பது சிறப்பு.
செய்த குற்றத்திற்காக ஒருவரைக் காவலர்கள் பிடிக்கிறார்கள். அதனை எவ்வாறு சொல்கிறோம் ? கைது செய்யப்பட்டார் என்கிறோம். அவரைக் கைதி என்கிறோம். கைது, கைதி ஆகியன தமிழல்ல, உருதுச் சொற்கள். அதனைத் தமிழில் எவ்வாறு சொல்வது ? சிறை பிடிக்கப்பட்டார் என்று சொல்ல வேண்டும். கைதானவரைச் ‘சிறையாள்’ எனலாம்.

வீட்டுப் பொருள்களைச் சாமானம் என்று சொல்வோமே, அதுவும் உருதுதான். அதனைக் கலயம், கலன் என்று தமிழில் சொல்லலாம். ‘ஒரு தினுசாகவே நடந்துக்கறான்’ என்போம். அந்தத் தினுசு உருதுதான். ஒரு வகையாக என்பது அதன் பொருள்.
ஆட்சி மட்டத்தில் நிறைய உருதுச் சொற்களைக் காணலாம். தாசில்தார், தாலூகா, ஜில்லா, போன்றவை உருதுச் சொற்கள்தாம். அவற்றினைத் தற்போது நன்றாகவே தமிழில் மாற்றிவிட்டோம். வட்டாட்சியர், வட்டம், மாவட்டம் என்று பயன்படுத்துகிறோம்.

வழக்கு மன்றச் சொற்பயன்பாட்டிலும் உருதுச் செல்வாக்கு உண்டு. பிராது, புகார், பைசல், வாய்தா, வாபஸ், வகையறா, வசூல் ஆகிய சொற்கள் இன்றும் வழங்கப்படுகின்றன அவற்றுக்கான தமிழ்ச்சொற்கள் இவை.

பிராது – முறையீடு
புகார் – குறைதீர்வேட்பு
பைசல் – தீர்வு
வாய்தா – மறுவாய்ப்பு
வகையறா – மேலும் பிற, அல்லது பிறர்
வசூல் - திருப்பல்    
பீடி என்று சொல்வதும் உருதுதான். இலைச்சுருட்டு என்பதுதான் தமிழ். தயார், தயாரிப்பு என்பனவும் உருதுச் சொற்கள். அணியம், ஆக்கம் என்று சொல்வதுதான் தமிழ்.

உருதுச் சொற்களை இனங்கண்டு தவிர்த்து அவ்விடத்தில் உரிய தமிழ்ச்சொற்களை ஆள்வது சிறப்பு.
இச்செய்தியை ஆழ் ந்து கவனித்து கருத்தில் கொண்டால் உலகாழும் தமிழை விண்ணையும் ஆழ் வைக்கலாம்.
இப்படியான விசேட செய்திகளை வாசிக்க எப்பொழுதும் இணைந்திருங்கள் உடன் இணைந்திருங்கள்.