எதிர்வரும் காலங்களில் நோய் பரவும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பரிசோதகர்கள்

Mayoorikka
4 years ago
எதிர்வரும் காலங்களில் நோய் பரவும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பரிசோதகர்கள்

முறையான சுகாதாரத்தை கடைப்பிடிக்காவிட்டால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்  நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.

நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார சட்டத்தை மீறி பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் அவ்வாறான இடங்களுக்குள் பிரவேசித்து சுகாதார சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தில் சுகாதார நடைமுறைகள் கடுமையான முறையில் மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4