தமிழும் அதன் தொன்மைகளும், சிறப்புக்களும். அதன் சான்றுகளும். பாகம்  02.  பிடித்தால் பகிருங்கள்.

Shelva
2 years ago
தமிழும் அதன் தொன்மைகளும், சிறப்புக்களும். அதன் சான்றுகளும். பாகம்  02.  பிடித்தால் பகிருங்கள்.

உலகளாவிய ரீதியில் தமிழுக்கு உள்ள மற்றும் இருந்த‌ தொன்மை, பலம், தூய்மை, விருந்தோம்பல் பற்றிய தகவல்களை, தொல்பொருளியல் மட்டுமல்ல. பல நாட்டு ஆய்வாளர்களும் நிரூபனம் செய்துள்ளனர்.

அந்த வகையில்...

  • ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்த நாடு நம் தமிழர்கள் நாடுகள் என்பதே நம் தாய் மொழியான தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்றாகும்.
  • 2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன.
  • 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
  • 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.
  • 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று.
  • 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே.
  • உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
  • இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் உலக‌ மொழி தமிழ்.
  • உலகளாவிய ரீதியில், தொலை ந‌கல் எனப்படும் கருத்துக் காவியை கண்டுபிடித்ததும் ஒர் தமிழனாவான்.

      ஆம்...

  • வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று.
  • உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை.
  • சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.
  • ஆனால் நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது.
  • மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

1.தொன்மை (Antiquity)

2.தனித்தன்மை (Individuality)

3.பொதுமைப் பண்பு (Common Characters)

4.நடுவு நிலைமை (Neutrality)

5.தாய்மைத் தன்மை (Parental Kinship)

6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)

7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)

8.இலக்கிய வளம் (Literary prowess)

9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)

10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)

11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

  • தமிழின் பெருமையை சான்றோர்கள், அறிஞர்கள், மேலை நாட்டவர்கள் என பலரும் கூறியவவையாவன:
  • தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.

          - சிவஞானமுனிவர் -

  • நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள்.
  • சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்
  • தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்
  • தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)
  • தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

 

      எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

 

  • தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” - ராபர்ட் கால்டுவெல்

 

  • "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி”

              -ஐயனாரிதனார்

 

  • தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.”
  • டாக்டர் கால்டுவெல்
  • தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.
  • திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.

           - பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

தமிழின் பெருமையை உணர்த்தும் சங்க கால நூல்கள்:

@  “ என்றுமுள தென்தமிழ்

இயம்பி இசை கொண்டான் ”

எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்

முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

 

@  "எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்!" -  பெரியபுராணம்.

 

@  "நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்!" – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

 

@  "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து

பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?"

திருவிளையாடற் புராணம்

 

@  "கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்?" - மதுரைக் கலம்பகம்

 

@ "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" - தமிழ்விடு தூது.

 

@  "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னேர் இலாத தமிழ்" -  தண்டியலங்காரம்

 

@  "ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"

- மனோன்மணீயம்

 

@  "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" - புறநானூறு

 

@  "ஆடல் பாடல் இசையே தமிழே" - சிலப்பதிகாரம்

 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)

எங்கும் காணோம்!" என்று பாரதியாரும்

 

"தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!" என்று பாவேந்தரும் தமிழின் பெருமையை தங்களின் பாடல்கள் மூலம் கூறியுள்ளனர்.

 

  • தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்..! தமிழின் பெருமையை உணர்வோம்...! தமிழை போற்றி வளர்த்திடுவோம்...!

"எம் தமிழ் மொழியை உயிராய் காத்துப் போறுவோம்"

"உலகப் பிறமொழிகளையும் மதித்துக்  கற்போம்"

"ஆம் தமிழ் வாழ வழிவகுப்போம்"

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!