அதிகரித்த கொரோனா மரணங்கள்!

#Corona Virus
Mayoorikka
4 years ago
அதிகரித்த கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்  உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 423 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,111 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4