சீனா குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு

#China #United_States
Prasu
4 years ago
சீனா குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப்போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாக்கி, குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜென் சாக்கி தெரிவித்தார். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இதே ரீதியில் சீனாவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளன.

சீனாவில் உய்குர் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் சித்ரவதை மற்றும் படுகொலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதை கண்டித்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4