யாழில் பட்டப்பகலில் 14 பவுண் நகை கொள்ளை
#Police
#Jaffna
Prathees
4 years ago
யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 14 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் குறித்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலையில் குறித்த வீட்டில் உள்ளவர்கள் கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டினை அவதானித்த போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே