இன்றைய வேதவசனம் 08.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேதவசனம் 08.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு மண்புழுவுக்கு ரொம்ப வருத்தம். அடடா... கடவுளுக்கு எவ்வளவு பாரபட்சம்? இந்த நத்தைகளுக்கு மட்டும் ஆபத்து வந்தால் ஓடி ஒளிய ஒரு கூடு இருக்கிறது.

எப்பொழுதும் சுதந்திரமாய் அது சுற்றித் திரிகிறது. ஆனால், மண்புழுவான எனக்கு இப்படியா? என்ன சுகத்தைக் கண்டேன்? என்று சொல்லி அழுதது.

ஒருநாள் நத்தைக்கூடு ஒன்று வழியில் காலியாகக் கிடந்தது. மண்புழுவுக்கு அதை கண்டதும் சட்டென்று ஒரு யோசனை உதயமாயிற்று. வசதியாய் வாழ விரும்பி அந்த கூட்டிற்குள் போய் உட்கார்ந்துகொண்டது. ஆ! என்ன சுகம்!

அந்த சமயத்தில் அங்கே ஒரு மாடு மேய்ந்து கொண்டு வந்தது. அந்த மாட்டிற்கு, கீழே நத்தை ஓடு கிடப்பதும் அதனுள்ளே மண்புழு "பெருமையோடு" அமர்ந்திருப்பதும் தெரியவில்லை.

நடந்து வந்த மாடு தெரியாமல் நத்தை ஓட்டின் மேல் மிதிக்க அது நொறுங்கிப்போய் விட்டது. நசுங்கிய மண்புழுவுக்கோ அளவுக்கு ஏகப்பட்ட வலி. மாட்டின் மீது கடுங்கோபம் கடவுளின் மீது சொல்லத் தேவையில்லை.

மண்ணுக்குள் இருந்து இன்னொரு மண்புழு மெதுவாய் தலையை நீட்டியது. தம்பி நீ இருக்கும் இடத்தில் இருந்திருந்தால் தான் உனக்கு நல்லது, பாதுகாப்பும் கூட! மண்ணுக்குள்ளே மறைந்திருந்தால் இப்படி ஆகிருந்திருக்குமோ?

போதகம் செய்த மண்புழுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, நசுங்கிய தன் உடலை மிகவும் கஷ்டப்பட்டு, மண்ணுக்குள் இழுத்து சென்றது அந்தப் புழு!

வேதம் சொல்கிறது:- அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். (1 கொரி 7:20)
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!