குண்டர் அரசியலை நிறுத்துமாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

#Sajith Premadasa
Prathees
4 years ago
குண்டர் அரசியலை நிறுத்துமாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

பாராளுமன்றத்தில் குண்டர் கும்பலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வைப் புறக்கணித்தனர்.

எவ்வாறாயினும், சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபைக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காணமுடிந்தது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு சபாநாயகர் குழுக்களை நியமித்து வருகிறார். இன்றைய தேவை குழு அரசியலை செயல்படுத்துவது அல்ல, சபையில் குண்டர் அரசியலை செயல்படுத்த முயலும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சி த் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4