வடக்கில் குடியிருப்பு காணிகள் காடுகளாக அறிவிக்கப்படலாகாது. - சித்தார்த்தன் எம்பி.

#SriLanka #NorthernProvince
வடக்கில் குடியிருப்பு காணிகள் காடுகளாக அறிவிக்கப்படலாகாது. - சித்தார்த்தன் எம்பி.

குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படலாகாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் உரையாற்றுகையில்,

“குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர், வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது” என குற்றம்சுமத்தியுள்ளார்.

இதேவேளை அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சனை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அது தொடர்பில் கவனமான அனுகுமுறை தேவை என்று ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தினை தமிழ் மக்கள் மேய்ச்சல் நிலம் என்று கூறும் போது, முஸிலிம் மக்கள் அதனை வயல் நிலங்கள் என்று கூறி வரு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4