இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி வழங்குகின்றது? பாராளுமன்றத்தில் சீறிய எம் பி

Mayoorikka
4 years ago
இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி வழங்குகின்றது? பாராளுமன்றத்தில் சீறிய எம் பி

தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்காகவா உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றனவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,

வவுனியா வடக்கின் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடிவைத்தகுளம் பகுதியில் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம், ஊர்காவல் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி இருந்தார்கள்.

அந்த மக்கள் மீளவும் அங்கு மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அந்தப் பகுதியில் பெரியக்கட்டிக்குளம் ஒதுக்க காடு என அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. 

யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னரும் அங்கு மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் கச்சல்சமணங்குளம் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தின் பெயர் 'சப்புமல் தென்ன' மாற்றம் செய்யப்பட்டு அங்கு பெரியதொரு 'சப்புமல் கஸ்கட'என்ற விகாரையும் அமைக்கப்
பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெரியக் கட்டிக்குளத்தையும் அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு சிறிய குளத்தையும் இணைத்து காடழிக்கப்பட்டு ஒரு பாரிய குளம் அமைக்கப்பட்டு தமிழர்கள் விவ
சாயம் செய்து வந்த 300 ஏக்கர் வயல் நிலங்கள் உள்வாங்கப்பட்டு சிங்களமக்கள்
குடியேற்றப்பட்டுள்ளார்கள். 

அந்த விகாரைக்கு செல்வதற்காக இப்போது நெடுஞ்சலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவோடுஒரு காப்பெற் வீதியும் அமைக்கப்பட்டு வருகின்றது காடுகள், ஒதுக்க காடுகள் என்ற சட்ட
திட்டங்களானது வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் தமிழர்களின் நிலங்களை பறிமுதல் செய்து பெரும்பான்மையினத்தவர்களின் தேவைகளுக்காக கொடுத்து ஓர் இனக்கரைப்பு செய்வதன்
மூலம் எமது இனத்தை இல்லாமல் செய்யும் ஒரு வேலைத்திட்டமே இங்கு நடைபெறுகின்றது. 

இந்த விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். தமது பகுதிகளில் தமிழர்கள் முழுமையாக மீளக்
குடியமர நீங்கள் அனுமதிக்க வேண்டும். அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23,803ஏக்கர்ஏனைய காடுகள் என்ற பகுதிக்குள் வரும்
காடுகளை ஒதுக்க காடுகளாக புதிதாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இது உங்களின் சுற்று நிருபங்களுக்கும் தீர்மானங்களுக்கும் முரணானது. 

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2021{2ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் காணி அமைச்சினால் பிரதேச செயலகங்களுக்கு ஏனைய காடுகள் என்பதனை நீங்கள் நிர்வாகம் செய்ய முடியு மென அறிவிக்கப்பட்டுள்ளது.உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உங்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால் நீங்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவது தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்காகவா எனக் கேள்வி எழுப்பினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4