இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - பிபின் ராவத் நிலை என்ன?

Reha
4 years ago
இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - பிபின் ராவத் நிலை என்ன?

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்தில்10 பேர் உயிரிழந்துள்ளதாக பேர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை  10 பேரின் உடல்கள்   மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி குறித்த  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4