முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல் உடைத்து, திருடப்பட்டுள்ளது!

#SriLanka
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல் உடைத்து, திருடப்பட்டுள்ளது!

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்றிரவு இனம் தெரியாத விஷமிகளால் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் இவ்வாறு உடைத்து  திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இக்கட்டான இச்சூழ்நிலையில் இவ்வாறான சமூக விரோத, பாப கரமான செயலில் ஈடுபட்டவர்கள் யாரயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4