இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் தொழில் வாய்ப்பு!

#SriLanka
இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் தொழில் வாய்ப்பு!

இலங்கை வாழ் மக்களுக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவி தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் இன்னுமொரு வருடத்திற்கு நீடிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க ஏற்கனவே வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

ருமேனியா பணிக்காக தற்போது வரையில் சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராஜங்க அமைச்சர் இந்நாட்டு வேலைக்காக அதிகளவு பணம் அறவிடப்படுவதாக வெளியாகின்ற செய்திகள் தவறானவை என்பதையும் சுட்டிக்காட்டியு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4