இலங்கை - போலாந்து நேரடி விமான சேவை ஆரம்பம்

Prasu
4 years ago
இலங்கை - போலாந்து  நேரடி விமான சேவை ஆரம்பம்

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் இன்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்த விமான சேவையின் மூலம் மேற்கு ஐரோப்பா ஸ்கன்டிநேவியா நாடுகள், போல்டிக் நாடுகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய விமான பயணிகள் வரவுள்ளனர்.

இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும். அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறவுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4