பொலிஸ் பெரியப்பாவால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி

#Abuse #Sexual Abuse
Prathees
4 years ago
பொலிஸ் பெரியப்பாவால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி

தனது சகோதரரின் 14 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான சிறுமியின் பெரியப்பாவை கைது செய்த  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு பகுதியில் வசிக்கும் சிறுமி, விடுமுறை நாட்களில் மொனராகலை மாவட்டத்தில் உள்ள கோனகங்கர பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

வீட்டில் இருந்த தாத்தாவால் சிறுமி பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கொடகவெல பிரதேசத்தில் இந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பாலியல் வன்கொடுமை தொடர்பில்

கஹவத்த நீதி வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இவர் கடந்த காலங்களில் பல தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில் விடுமுறைக்காக கோனகங்கர பகுதியில் உள்ள தனது பெரியப்பாவின் வீட்டிற்குச் சென்றபோது தனது பெரியப்பா  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவரிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து,  மருத்துவர் பொலஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து கோனகங்கர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4