தொற்றா நோயை கட்டுப்படுத்த மாவட்ட மட்ட செயற்குழு

Prabha Praneetha
4 years ago
தொற்றா நோயை கட்டுப்படுத்த மாவட்ட மட்ட செயற்குழு

தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, மாவட்ட மட்ட குழு வின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைவாக ,நாடளாவிய ரீதியில் தொற்றா நோய் தொடர்பான மாவட்ட மட்டக் குழுக்கள் மாவட்ட ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொற்றா நோயை குறைப்பதற்காக சேவையாற்றுவதற்கான மாவட்ட மட்ட செயற் குழு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் ஆகிய இருவரது இணைத்தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4