சடுதியாக அதிகரித்த கோழிஇறைச்சி மற்றும் முட்டையின் விலை :- அதிர்ச்சியில் மக்கள் !!

Prabha Praneetha
4 years ago
சடுதியாக அதிகரித்த கோழிஇறைச்சி மற்றும் முட்டையின் விலை :- அதிர்ச்சியில் மக்கள் !!

முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் வெள்ளை முட்டையின் விலை ரூ.24ல் இருந்து ரூ.26 ஆகவும், சிவப்பு முட்டை ரூ.25ல் இருந்து ரூ.27 ஆகவும் விலை உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோழிக்கறி 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் தாம் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முட்டை மற்றும் கோழிக்கறி வியாபாரிகள், அண்மைக்காலமாக கோழிக்கறி மற்றும் முட்டையின் மொத்த விற்பனை விலை உயர்வால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விலைவாசி உயர்வு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனையும் சரிவடைந்துள்ளதாகவும், நுகர்வோர்கள் போலவே தாங்களும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4