நாட்டில் தரமான சுகாதார சேவைகள்: பெருமிதமடைந்த அமைச்சர்

Mayoorikka
4 years ago
நாட்டில் தரமான சுகாதார சேவைகள்: பெருமிதமடைந்த அமைச்சர்

கொரோனா  நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் வெளியிட்ட போதிலும் கோவிட் கட்டுப்பாட்டில் எதிர்பார்ப்புக்களை கடந்து வெற்றியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 75 வீதமானவர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசி ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னதாக தாமும் கோவிட் தொற்றுக்கு இலக்கானதாகவும், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்துள்ளதாகவும் நாட்டில் காணப்படும் சுகாதார வசதிகள் தரமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தங்களது கருத்துக்களை வெளியிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோவிட் நிலைமைகளிலும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4