வரவு செலவுத் திட்டத்தின் நடுவில் சண்டையிட்ட இரு பிரதேச சபை உறுப்பினர்கள் 

#Budget 2022
Prathees
4 years ago
வரவு செலவுத் திட்டத்தின் நடுவில் சண்டையிட்ட இரு பிரதேச சபை உறுப்பினர்கள் 

பெந்தோட்டை பிரதேச சபையின் வரவு செலவு திட்ட விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் உரையாற்றும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுரங்க சமரநாயக்கவுக்கும், சமகி ஜன பலவேகய பிரேமசிறி ஹெட்டியாராச்சிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சபைக்கு பொருந்தாத வார்த்தைகளால் ஐக்கிய தேசியக் கட்சி எம்பியை தாக்கி சமகி ஜன பலவேகய எம்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் சூடுபிடித்தது.

சில நிமிடங்களின் பின்னர் சபையில் கூச்சல் ஏற்பட்டதையடுத்து அவைத் தலைவர் சரத் ஆனந்த சபையை
சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்தார். 

இதையடுத்து சபை வழக்கம் போல் ஆரம்பிக்கப்பட்டு, பெந்தோட்டை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4