அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளால் பி.பி.ஜெயசுந்தர பதவி விலகுவாரா?

#Resign
Prathees
4 years ago
அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளால் பி.பி.ஜெயசுந்தர பதவி விலகுவாரா?

பி.பி.ஜயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோருவதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமல் ராஜபக்ஷ மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் குழு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளரை கடுமையாக விமர்சித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

பி.பி.ஜெயசுந்தர, பதவியை இராஜினாமா செய்வதாக அண்மையில் தனது நண்பர்களுடன் தெரிவித்திருந்தார்.

இதற்கு உடனடி காரணம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4