மாவீரன் கர்ணன் என்ற வாசகம்: முல்லைத்தீவில் கைதாகிய இளைஞன்

#Arrest
Mayoorikka
4 years ago
மாவீரன் கர்ணன் என்ற வாசகம்: முல்லைத்தீவில் கைதாகிய இளைஞன்

மாவீரன் கர்ணன் என்ற வாசகம் அடங்கிய வடிவமைக்கப்பட்ட ஸ்டீக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டிய புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

  மாவீரன் என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காக  வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முச்சக்கர வண்டியோடு வருகைதருமாறு சகோதரர்களான புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த தர்மராசா பிந்துசன் (வயது 21) மற்றும் தர்மராசா கனிஸ்ரன் (வயது 19 )  ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார்  அழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்துக்கும்  குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் உடனடியாக தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்த நிலையில்  உடனடியாக கைது நடவடிக்கையிலிருந்து பின்வாங்கிய பொலிஸார் போக்குவரத்துத்து பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தி முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற 19 வயதான இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை மாணவனை நேற்று முன்தினம் மதியம் (09.12.21) கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து இன்று (10.12.21) மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4