கொவிட் மரண எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு

#SriLanka #Covid 19 #Death
Prasu
4 years ago
கொவிட் மரண எண்ணிக்கை 22ஆக  அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 544,626 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 571,426 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4