மக்களில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவுகூட அரசுக்கு இல்லை! - சஜித் தெரிவிப்பு

#Sajith Premadasa
Prasu
4 years ago
மக்களில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவுகூட அரசுக்கு இல்லை! - சஜித் தெரிவிப்பு

அரசுக்கு மக்கள் அபிப்பிராயத்தில் மூன்றில் ஒரு பங்கேனும் ஆதரவு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவிசாவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவ்வாறான ஆதரவு இல்லை.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மூன்றில் இரண்டு இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டுமாறு எதிர்க்கட்சி சவால் விடுத்துள்ளது.

நாட்டு வளங்களைப் பாதுகாக்க வந்த அரசு அமைச்சரவைக்கும் தெரிவிக்காமல் அனைத்து வளங்களையும் விற்பனை செய்கின்றது.

அரசு விவசாய சமூகத்தை சட்டியில் இருந்து அடுப்புக்குள் தள்ளிவிட்டுள்ளது" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4